Home Fruits of Holy Spirit

Fruits of Holy Spirit

07 Aug 2016

Fruits of Holy Spirit Download PDF

ஆவியின் கனிகள்

கலாத்தியர் 5:22-23

22. ஆவியின் கனியோ,
1) அன்பு, (தன்னலமற்ற)
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம். (கலாத்தியர் 6:9-10)

2) சந்தோஷம், (பெருமகிழ்ச்சி)
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோசத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். (எபிரெயர் 12:2)
நாமும் இந்த பூமியில் உள்ள பாடுகளையும், அவமானத்தையும் சகித்து, தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்போம் என்ற சந்தோஷத்தில், பெருமகிழ்ச்சியில் இருப்போம்.

3) சமாதானம்,
பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. (ரோமர் 15:13)
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். (ரோமர் 5:1)

4) நீடியபொறுமை, (விடாமுயற்சி, பொறுமை)
உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். (எபிரெயர் 6:12)
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (எபிரெயர் 12:1)

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2 பேதுரு 3:9)
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள். (ரோமர் 12:12)

5) தயவு, (மென்மையாக, கண்ணியமாக, நிதானத்தோடு செயல்படுதல்)
ஒரு மனிதன் மற்றொரு மனிதனை, கண்ணியத்தோடு நடத்தவேண்டும். சாந்தம் என்பதை பணிவு என்றும் பொருள் கொள்ளலாம். பணிவு என்பது தாழ்ச்சியே தவிர பலவீனம் அல்ல.

6) நற்குணம் , (நற்குணம் என்பது செம்மையான இருதயத்தை குறிக்கின்றது)
நன்மையான எந்த சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. (யாக்கோபு 1:17)
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (எபேசியர் 5:9)
இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து (மத்தேயு 21:12)
இயேசு கிறிஸ்து, தவறுதலான நடவடிக்கைகளை சரி செய்கின்றார். அதையே நம்மிடமும் எதிர்பார்க்கின்றார். தேவாலயத்தில் நடக்கும் தவறுதலான நடவடிக்கைகளை, மிக முக்கியமாக, தவறு செய்யும் போதகர்களை இரக்கமின்றி கடிந்து கொள்ளவேண்டும்.

7) விசுவாசம்,
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. (எபிரெயர் 11:1)
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 17:20)
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். (எபிரெயர் 11:11)

இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான். (வெளிப்படுத்தின விசேஷம் 17:14)
நீங்கள் கட்டாயமாக கடவுளுடைய வார்த்தையில் முழுவிசுவாசம் வைக்கவேண்டும்.

8) சாந்தம்,
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் (மத்தேயு 21:4) (ராஜாக்கள் ஒருபோதும் கழுதையின் மீது ஏறி வருவதில்லை. ஆனால், எல்லாம் வல்ல இறைவனுடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்து, கழுதையின் மீது ஏறி வந்தது என்பது, அவருடைய பணிவையே இங்கு காண்பிக்கின்றது.)

சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். (கலாத்தியர் 6:1-2)

9) இச்சையடக்கம் (சுயகட்டுப்பாடு, கடவுள் வழியில் பிரச்சனைகளை கையாள வேண்டும்)
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு”, எந்த ஒரு தீய பழக்கத்திற்;கும் நீங்கள் அடிமை ஆகிவிடக்கூடாது. ஆகையால்,

நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. (2 பேதுரு 1:5-7,10)
இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

கலாத்தியர் 5:24-26

24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
25. நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
26. வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.ஆதலால், மனிதர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்.
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது;அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்;கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
(மத்தேயு 7:12-20)

மாமிசத்தின் கிரியைகளான, விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலியனவற்றை விட்டு விட்டு,

ஆவியின் கனிகளான, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் முதலியனவற்றை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.

ஆவியின் கனிகளோ கடவுளிடமிருந்து வந்தது, மாமிசத்தின் கிரியைகளோ சாத்தானிடமிருந்து வந்தது. நாம் சாத்தானுடைய உடலை பெற்றிருப்பதால், நம்மிடம் அவனுடைய கிரியைகளை செய்கின்றான். நாமோ கடவுளுடைய கிரியைகளை செய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற் கொண்டு மனுசகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (யோவான் 8:44)

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். (யாக்கோபு 4:7-8)

English Version

Fruits of Holy Spirit

Galatians 5:22-23

22. But the fruit of the Spirit is,
1) Love, (Selfless, affection, good will)
And let us not be weary in well doing: for in due season we shall reap, if we faint not.
As we have therefore opportunity, let us do good unto all men, especially unto them who are of the household of faith. (Galatians 6:9-10)

2) Joy, (cheerfulness, calm delight, gladness)
Looking unto Jesus the author and finisher of our faith; who for the joy that was set before him endured the cross, despising the shame, and is set down at the right hand of the throne of God. (Hebrews 12:2).
Let us endure the shame and the sufferings in this world with cheerfulness (joy) that we will be seated at the right hand of God.

3) Peace,
Now the God of hope fill you with all joy and peace in believing, that ye may abound in hope, through the power of the Holy Ghost. (Romans 15:13)
Therefore being justified by faith, we have peace with God through our Lord Jesus Christ: (Romans 5:1)

4) Longsuffering, (Perseverance, endurance)
That ye be not slothful, but followers of them who through faith and patience inherit the promises. (Hebrews 6:12)
Wherefore seeing we also are compassed about with so great a cloud of witnesses, let us lay aside every weight, and the sin which doth so easily beset us, and let us run with patience the race that is set before us. (Hebrews 12:1)
The Lord is not slack concerning his promise, as some men count slackness; but is longsuffering to us-ward, not willing that any should perish, but that all should come to repentance. (2 Peter 3:9)
Rejoicing in hope; patient in tribulation; continuing instant in prayer; (Romans 12:12)

5) Gentleness, (moral excellence in character; Mild, absence of bad temper, not severe, rough or violent)
Gentleness, may mean “meekness”, does not mean weakness but humility.
A man who treats other people in a proper and polite way. The opposites of gentleness are anger, a desire for revenge, rough or violent.

6) Goodness, (Goodness means uprightness of heart, benevolence)
Every good gift and every perfect gift is from above, and cometh down from the Father of lights, with whom is no variableness, neither shadow of turning. (James 1:17)
For the fruit of the Spirit is in all goodness and righteousness and truth; (Ephesians 5:9)
And Jesus went into the temple of God, and cast out all them that sold and bought in the temple, and overthrew the tables of the moneychangers, and the seats of them that sold doves. (Mathew 21:12)

Jesus corrected wrong doings. He expected us to do the same. Wrong doings in the Church, very particularly misbehaving preachers to be rebuked without mercy as Christ drove the moneychangers out of the temple.

7) Faith,
Now faith is the substance of things hoped for, the evidence of things not seen. (Hebrews 11:1)
And Jesus said unto them, Because of your unbelief: for verily I say unto you, if ye have faith as a grain of mustard seed, ye shall say unto this mountain, Remove hence to yonder place; and it shall remove; and nothing shall be impossible unto you. (Matthew 17:20)
Through faith also Sara herself received strength to conceive seed, and was delivered of a child when she was past age, because she judged him faithful who had promised. (Hebrews 11:11)
These shall make war with the Lamb, and the Lamb shall overcome them: for he is Lord of lords, and King of kings: and they that are with him are called, and chosen, and faithful. (Revelation 17:14)
You should have faith in the word of God.

8) Meekness, (humility)
Tell ye the daughter of Sion, Behold, thy King cometh unto thee, meek, and sitting upon an ass, and a colt the foal of an ass. (Matthew 21:5) (Kings may not ride on donkey. But son of God rode on a donkey. This shows his meekness.)
Brethren, if a man be overtaken in a fault, ye which are spiritual, restore such an one in the spirit of meekness; considering thyself, lest thou also be tempted.

Bear ye one another’s burdens, and so fulfil the law of Christ.(Galatians 6:1-2)

9) Temperance, (The trait of avoiding excesses, self-control, able to handle problems in a godly way)
“Too much of anything is good for nothing”, you should not became a slave (addicted) for any bad habits.

And beside this, giving all diligence, add to your faith virtue; and to virtue knowledge;
And to knowledge temperance; and to temperance patience; and to patience godliness;
And to godliness brotherly kindness; and to brotherly kindness charity.
Wherefore the rather, brethren, give diligence to make your calling and election sure: for if ye do these things, ye shall never fall: (2 Peter 1:5-7,10)
Against such there is no law.

Galatians 5:24-26

24. And they that are Christ’s have crucified the flesh with the affections and lusts.
25. If we live in the Spirit, let us also walk in the Spirit.
26. Let us not be desirous of vain glory, provoking one another, envying one another.Therefore all things whatsoever ye would that men should do to you, do ye even so to them: for this is the law and the prophets.
Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat:
Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.
Beware of false prophets, which come to you in sheep’s clothing, but inwardly they are ravening wolves.
Ye shall know them by their fruits. Do men gather grapes of thorns, or figs of thistles?
Even so every good tree bringeth forth good fruit; but a corrupt tree bringeth forth evil fruit.
A good tree cannot bring forth evil fruit, neither can a corrupt tree bring forth good fruit.
Every tree that bringeth not forth good fruit is hewn down, and cast into the fire.
Wherefore by their fruits ye shall know them.
As we have said earlier, the Spirit and the flesh are at war. Let the Spirit to have control over flesh. (Matthew 7:12-20)You should give up the works of the flesh which are, Adultery, fornication, uncleanness, lasciviousness, Idolatry, witchcraft, hatred, variance, emulations, wrath, strife, seditions, heresies, envying, murders, drunkenness, retellings and

Cover yourself with the fruits of Holy Spirit which are, love, joy, peace, longsuffering, gentleness, goodness, faith, Meekness, temperance.

The fruits of Holy Spirit come from God, but the works of the flesh come from Satan. We are having his body, so he is doing all kind of his filthy acts within us. But we have to follow the fruits of Holy Spirit.

Ye are of your father the devil, and the lusts of your father ye will do. He was a murderer from the beginning, and abode not in the truth, because there is no truth in him. When he speaketh a lie, he speaketh of his own: for he is a liar, and the father of it. (John 8:44)

Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you.
Draw nigh to God, and he will draw nigh to you. Cleanse your hands, ye sinners; and purify your hearts, ye double minded. (James 4:7-8)

WordPress Lightbox