Home Spirit of the Lord

Spirit of the Lord

30 Nov 2016

Spirit of the Lord Download PDF

கர்த்தருடைய (இயேசு கிறிஸ்து) ஆவியானவர்

முந்தையப்பதிவு, கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயத்தை அருளும் ஆவி, அதனுடைய தொடர்ச்சி, கர்த்தருடைய ஆவியானவர்.

7. கர்த்தருடைய ஆவியானவர்

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. (2 கொரிந்தியார் 3:17)

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், (ஏசாயா 61:1)

நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. (யோவேல் 2:27)

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. (யோவான் 1:1-4)

வார்த்தையானவர் மாமிசமானார்

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:14)

ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். (ஏசாயா 7:14)

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசாயா 9:6)

அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். (மத்தேயு 1:20-23)

ஆவி மாமிசமானார்

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். (லூக்கா 24:36-40)

விளக்கவுரை:

எல்லாம் வல்ல இறைவனுடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்து, பரலோகத்தில் உடலோடும், தொட்டு உணரக்கூடியவராகவும் இருக்கின்றார். கர்த்தருடைய ஆவியானவர் அவரோடுகூட இருக்கின்றார். மேலும், ஞானத்தை அருளும் ஆவியும், உணர்வை அருளும் ஆவியும், ஆலோசனை அருளும் ஆவியும், பெலனை அருளும் ஆவியும், அறிவை அருளும் ஆவியும், கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அருளும் ஆவியும் அவரோடுகூட இருக்கின்றார்கள்.

அபிஷேகிக்கும் கர்த்தருடைய ஆவியானவர்

அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். (1 சாமுவேல் 10:6)

அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்……. (1 சாமுவேல் 16:13)

அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். (யோவேல் 2:28)

நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார். (எசேக்கியேல் 39:29)

விளக்கவுரை:

கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கின்றார்” (ஏசாயா 61:1) மேற்க்கண்ட இவ்வசனம், கர்த்தருடைய (இயேசு கிறிஸ்து) ஆவியானவர் பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் செயல்பட்டார் என்பதை, மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது. தேவனாகிய கர்த்தர், பரிசுத்த கன்னி மரியாள் வழியாக மனுவுருவாகி, (Physical form) இயேசு கிறிஸ்து என்ற பெயரில், இவ்வுலகத்திற்க்கு வந்தார். மீண்டும் ஆவியின் உருவில் (spiritual form) பரலோகம் சென்றுவிட்டார்.

நான் என்னுடைய காட்சிகளில், எப்பொழுதெல்லாம் இயேசு கிறிஸ்துவைக் காண்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் பரிசுத்த கன்னி மரியாள் உடன் இருப்பதைப் பார்க்கின்றேன். எப்பொழுதெல்லாம் கன்னி மரியாளை காட்சிகளில் பார்க்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் இயேசு கிறிஸ்துவும் உடன் இருப்பதைப் பார்க்கின்றேன். (மேற்கண்ட இக்குறிப்பு ஆசிரியரால் எழுதப்பட்டது)

கர்த்தருடைய ஆவியும், அவருடைய பெலனும்

அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. (நியாயாதிபதிகள் 14:6)

அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம்பண்ணினார்கள் அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்து போயிற்று. (நியாயாதிபதிகள் 15:14)

கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ?

பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.

கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது. (ஏசாயா 40:6-8)

யாக்கோபு வம்சம் என்று பேர்பெற்றவர்களே கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? (மீகா 2:7)

ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.

அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.

உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். (யோவான் 8:24-28)

சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியின்நிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்

அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.

மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.

எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.

மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.

மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். (ரோமர் 8:5-13)

நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன். (மீகா 3:8)

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9)

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். (எசேக்கியேல் 37:14)

குறிப்பு: அடுத்தப் பதிவு,

7. கர்த்தருடைய ஆவியானவர்

English Version

7. Spirit of the Lord

Spirit of the Lord is continuation of the previous topic Spirit of fear of the Lord.

Now the Lord is that Spirit: and where the Spirit of the Lord is, there is liberty. (2 Corinthians 3:17)

The Spirit of the Lord God is upon me; because the Lord hath anointed me to preach good tidings unto the meek; he hath sent me to bind up the brokenhearted, to proclaim liberty to the captives, and the opening of the prison to them that are bound; (Isaiah 61:1)

And ye shall know that I am in the midst of Israel, and that I am the Lord your God, and none else: and my people shall never be ashamed.
(Joel 2:27)

In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

The same was in the beginning with God.

All things were made by him; and without him was not anything made that was made.
In him was life; and the life was the light of men. (John 1:1-4)

Word was made flesh

And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth. (John 1:14)

A virgin shall conceive and bear a son

Therefore the Lord himself shall give you a sign; Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name Immanuel. (Isaiah 7:14)

For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace. (Isaiah 9:6)

Angel of the Lord and Joseph

But while he thought on these things, behold, the angel of the Lord appeared unto him in a dream, saying, Joseph, thou son of David, fear not to take unto thee Mary thy wife: for that which is conceived in her is of the Holy Ghost.

And she shall bring forth a son, and thou shalt call his name Jesus: for he shall save his people from their sins.

Now all this was done, that it might be fulfilled which was spoken of the Lord by the prophet, saying,

Behold, a virgin shall be with child, and shall bring forth a son, and they shall call his name Emmanuel, which being interpreted is, God with us. (Matthew 1:20-23)

Spirit has become flesh

And as they thus spake, Jesus himself stood in the midst of them, and saith unto them, Peace be unto you.

But they were terrified and affrighted, and supposed that they had seen a spirit.

And he said unto them, Why are ye troubled? and why do thoughts arise in your hearts?

Behold my hands and my feet, that it is I myself: handle me, and see; for a spirit hath not flesh and bones, as ye see me have.

And when he had thus spoken, he showed them his hands and his feet. (Luke 24:36-40)

Commentary:

Lord, the son of God in heaven (God himself) does have physical body and he is visible in nature. Spirit of lord was with Jesus and following spirits were with him and they are the spirit of wisdom and understanding, the spirit of counsel and might, the spirit of knowledge and of the fear of the Lord.

Anointing Spirit of the Lord

And the Spirit of the Lord will come upon thee, and thou shalt prophesy with them, and shalt be turned into another man. (1 Samuel 10:6)

Then Samuel took the horn of oil, and anointed him in the midst of his brethren: and the spirit of the Lord came upon David from that day forward…. (1 Samuel 16:13)

And it shall come to pass afterward, that I will pour out my spirit upon all flesh; and your sons and your daughters shall prophesy, your old men shall dream dreams, your young men shall see visions: (Joel 2:28)

Neither will I hide my face any more from them: for I have poured out my Spirit upon the house of Israel, saith the Lord God. (Ezekiel 39:29)

Commentary:

“The Spirit of the Lord God is upon me.” (Isaiah 61:1)
It clearly indicates the Spirit of Jesus worked during the Old Testament period. God the Elohim came to the world through Mother Mary in the name of Jesus in a physical form and both went back to Heaven in the spiritual form. I could see in my vision where ever Christ is there Mother Mary is with him and vice versa. (by the author)

Spirit of the Lord and his Might

And the Spirit of the Lord came mightily upon him, and he rent him as he would have rent a kid, and he had nothing in his hand: but he told not his father or his mother what he had done. (Judges 14:6)

And when he came unto Lehi, the Philistines shouted against him: and the Spirit of the Lord came mightily upon him, and the cords that were upon his arms became as flax that was burnt with fire, and his bands loosed from off his hands. (Judges 15:14)

Is the Spirit of the Lord straitened?

The voice said, Cry. And he said, what shall I cry? All flesh is grass, and all the goodliness there of is as the flower of the field:

The grass withereth, the flower fadeth: because the spirit of the Lord bloweth upon it: surely the people is grass.

The grass withereth, the flower fadeth: but the word of our God shall stand for ever. (Isaiah 40:6-8)

thou that art named the house of Jacob, is the spirit of the Lord straitened? Are these his doings? Do not my words do good to him that walketh uprightly? (Micah 2:7)

I said therefore unto you, that ye shall die in your sins: for if ye believe not that I am he, ye shall die in your sins.

Then said they unto him, Who art thou? And Jesus saith unto them, Even the same that I said unto you from the beginning.

I have many things to say and to judge of you: but he that sent me is true; and I speak to the world those things which I have heard of him.

They understood not that he spake to them of the Father.

Then said Jesus unto them, When ye have lifted up the Son of man, then shall ye know that I am he, and that I do nothing of myself; but as my Father hath taught me, I speak these things. (John 8:24-28)

Dead because of sin; but the Spirit is life because of righteousness.

For they that are after the flesh do mind the things of the flesh; but they that are after the Spirit the things of the Spirit.

For to be carnally minded is death; but to be spiritually minded is life and peace.

Because the carnal mind is enmity against God: for it is not subject to the law of God, neither indeed can be.

So then they that are in the flesh cannot please God.

But ye are not in the flesh, but in the Spirit, if so be that the Spirit of God dwell in you. Now if any man have not the Spirit of Christ, he is none of his.

And if Christ be in you, the body is dead because of sin; but the Spirit is life because of righteousness.

But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you.

Therefore, brethren, we are debtors, not to the flesh, to live after the flesh.

For if ye live after the flesh, ye shall die: but if ye through the Spirit do mortify the deeds of the body, ye shall live. (Romans 8:5-13)

But truly I am full of power by the spirit of the Lord, and of judgment, and of might, to declare unto Jacob his transgression, and to Israel his sin. (Micah 3:8)

If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness. (1 John 1:9)

And shall put my spirit in you, and ye shall live, and I shall place you in your own land: then shall ye know that I the Lord have spoken it, and performed it, saith the Lord. (Ezekiel 37:14)

Spirit of the Lord will continue…

WordPress Lightbox