Home Spirit of Counsel

Spirit of Counsel

03 Oct 2016

Spirit of Counsel Download PDF

ஆலோசனை அருளும் ஆவி.

முந்தையப்பதிவு, உணர்வை அருளும் ஆவி அதனுடைய தொடர்ச்சி, ஆலோசனை அருளும் ஆவி.

3. ஆலோசனை அருளும் ஆவி

ஆலோசனை என்பது,
தனி மனிதனுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண அல்லது சரிசெய்ய ஆலோசனை வழங்குதல்.
சொந்த பாதுகாப்பிற்காகவோ அல்லது சத்துருவிற்கு எதிராகவோ ஆலோசனை செய்தல்.
பொருத்தமான, நடைமுறைப்படுத்தக்கூடிய யோசனை சொல்லுதல்,
போதனை, கட்டளை, ஆணை,
உடன் உழைப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்தல், போன்றவைகள்.

கடவுளும் ஆலோசனையும்

…. அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர். (ஏசாயா 28:29)

ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. (நீதிமொழிகள் 8:14)

நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.

நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர். (ஏசாயா 44:25, 26)

யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன. (எரேமியா 32:19)

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். (நீதிமொழிகள் 19:21)

மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். (நீதிமொழிகள் 12:15)

விளக்கவுரை:

கடவுளையே நம்பி இருப்பவர்களுக்கு, ஆலோசனை கடவுளிடமிருந்து வரும். அவனவனுக்கு, அவனவனுடைய வழிகளுக்கு தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கப்படும். நாம் இறந்த மனித ஆவியிடமிருந்தோ, நட்சத்திரங்களையோ, சந்திரனையோ வைத்து குறி சொல்பவர்களிடமிருந்தோ ஆலோசனை பெறக்கூடாது.

உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசை கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். (ஏசாயா 47:13)

நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர். (ஏசாயா 44:25)

விளக்கவுரை:

மோயீசன் போல, எந்த ஒரு காரியத்திற்கும் கடவுளிடம் ஆலோசனை கேட்கவேண்டும். கடவுள் தன்னுடைய ஊழியன் மூலமாகவோ, காட்சி, கனவுகள், வியாக்கியானம் மூலமாகவோ நமக்கு ஆலோசனை வழங்குவார். சில நேரங்களில், ஆலோசனைப் பெற கால தாமதமானாலும், மிகப் பொறுமையோடு உபவாசத்திலும், ஜெபத்திலும் பாவ மன்னிப்பு கேட்பதிலும் நிலையாக இருந்து, கடவுளிடமிருந்து ஆலோசனைப் பெறவேண்டும். நீங்கள், நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவே கூடாது.

கிறிஸ்துவினுடைய திருத்தூதர் புனித பவுல், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் கொடுக்கும் ஆலோசனை:

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது.

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.

லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.

நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.

நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம (பரலோக) ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.

எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.

மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென். (2 தீமோத்தேயு 4:2-22)

நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து,

உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.

ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:

நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.

அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான். (எபிரேயர் 6:11-15)

நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். (வெளிப்படுத்தின விசேஷம் 3:18)

விளக்கவுரை: (கலிக்கம்)

கண்ணுக்கு வலுவூட்டுகின்ற, பார்வை கொடுக்கக்கூடிய மருந்து. வேதாகமத்தில் (கலிக்கம்), இது மனிதனுக்கு தெளிவூட்டுகின்ற, அறிவூட்டுகின்ற, வேத சத்தியமாக, வேத கட்டளையாக இருக்கின்றது.

மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

இது எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.

பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:20-23)

இப்படிப்பட்ட விரிவான நுண்ணாய்வு, ஆவியிலே பேதைமையை (குருட்டாட்டம்) போக்கி, நம் கண்களுக்கு ஒளி (கட்டளைகள்) என்ற துயர் தீர்க்கும் மருந்தாக அமைந்துவிடும்.

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. (வெளிப்படுத்தின விசேஷம் 3:17-19)

கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் 19:8)

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. (யோவான் 1:4)

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8:12)

விளக்கவுரை:

மேலே கூறப்பட்ட வேதவசனமாகிய, வெளிப்படுத்தின விசேஷம் 3:17-19, சங்கீதம் 19:8, யோவான் 1:4, யோவான் 8:12 – ன் படி
ஆவியிலே (குருட்டாட்டம்) பேதைமை உள்ளவர்களாய் இருக்கக் கூடாது. இயேசு உலகத்திற்கு ஒளியாக இருக்கின்றார். அவரைப் பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல், ஜீவஒளியை அடைந்திருப்பான். அந்த ஜீவ ஒளியே, நம் கண்ணிற்கு ஒளி (கட்டளைகள்) என்ற துயர் தீர்க்கும் மருந்தாக அமைகின்றது.

சுவிசேஷனுடைய வேலையைச் செய். உன் ஊழியத்தை நிறைவேற்று.

எல்லாவற்றையும் முடிந்தவரை கடவுளுடைய ஆலோசனையோடு செய்ய முயற்சி செய்.

குறிப்பு: அடுத்தப்பதிவு,
4. பெலனை அருளும் ஆவி.

English Version

3. Spirit of Counsel
The Spirit of Counsel is continuation of the previous topic Spirit of Understanding.

Counsel means, Give advice (someone) to resolve personal problems, the counsel for the defense or against adversary, advice that is ideal and feasible, instruction.

God and Counsel

…..the LORD of hosts, which is wonderful in counsel, and excellent in working. (Isaiah 28:29)

Counsel is mine, and sound wisdom: I am understanding; I have strength. (Proverbs 8:14)

That frustrateth the tokens of the liars, and maketh diviners mad; that turneth wise men backward, and maketh their knowledge foolish;

That confirmeth the word of his servant, and performeth the counsel of his messengers; that saith to Jerusalem, Thou shalt be inhabited; and to the cities of Judah, Ye shall be built, and I will raise up the decayed places thereof: (Isaiah 44:25, 26)

Great in counsel, and mighty in work: for thine eyes are open upon all the ways of the sons of men: to give everyone according to his ways, and according to the fruit of his doings: (Jeremiah 32:19)

There are many devices in a man's heart; nevertheless the counsel of the LORD, that shall stand. (Proverbs 19:21)

The way of a fool is right in his own eyes: but he that hearkeneth unto counsel is wise. (Proverbs 12:15)

Commentary:

Counsel will come from God to those who depend up on HIM. It is according to the individual’s ways, and according to the fruit of his doings. We should not get counsel from diviners who get information from familiar spirits, with the help of stars or moon etc.

Thou art wearied in the multitude of thy counsels. Let now the astrologers, the stargazers, the monthly prognosticators, stand up, and save thee from these things that shall come upon thee. (Isaiah 47:13)

That frustrateth the tokens of the liars, and maketh diviners mad; that turneth wise men backward, and maketh their knowledge foolish; (Isaiah 44:25)

Commentary:

Moses received frequent direct and detailed revelation from God. He was a man whose ear was always listening for God. Like Moses, seek the counsel of the Lord in all that you do and He will teach you what is best for you and direct you in the way you should go. God gives you counsel and instruct you through His servants, by visions, dreams and interpretation of tongues. Sometimes if there is a delay in getting an answer to your prayer, be patient, (kneel on your knees if possible) continue to repent, fast and pray without ceasing, till you get a word from God. Be strong and do not give up your hope on God.

Counsel of St. Paul, an apostle of Jesus Christ to every Christian:

Preach the word; be instant in season, out of season; reprove, rebuke, exhort with all longsuffering and doctrine.

For the time will come when they will not endure sound doctrine; but after their own lusts shall they heap to themselves teachers, having itching ears;

And they shall turn away their ears from the truth, and shall be turned unto fables.

But watch thou in all things, endure afflictions, do the work of an evangelist, make full proof of thy ministry.

For I am now ready to be offered, and the time of my departure is at hand.

I have fought a good fight, I have finished my course, I have kept the faith:

Henceforth there is laid up for me a crown of righteousness, which the Lord, the righteous judge, shall give me at that day: and not to me only, but unto all them also that love his appearing.

Do thy diligence to come shortly unto me:

For Demas hath forsaken me, having loved this present world, and is departed unto Thessalonica; Crescens to Galatia, Titus unto Dalmatia.

Only Luke is with me. Take Mark, and bring him with thee: for he is profitable to me for the ministry.

And Tychicus have I sent to Ephesus.

The cloak that I left at Troas with Carpus, when thou comest, bring with thee, and the books, but especially the parchments.
Alexander the coppersmith did me much evil: the Lord reward him according to his works:

Of whom be thou ware also; for he hath greatly withstood our words.

At my first answer no man stood with me, but all men forsook me: I pray God that it may not be laid to their charge.

Notwithstanding the Lord stood with me, and strengthened me; that by me the preaching might be fully known, and that all the Gentiles might hear: and I was delivered out of the mouth of the lion.

And the Lord shall deliver me from every evil work, and will preserve me unto his heavenly kingdom: to whom be glory forever and ever. Amen.

Salute Prisca and Aquila, and the household of Onesiphorus.

Erastus abode at Corinth: but Trophimus have I left at Miletum sick.

Do thy diligence to come before winter. Eubulus greeteth thee, and Pudens, and Linus, and Claudia, and all the brethren.

The Lord Jesus Christ be with thy spirit. Grace be with you. Amen. (2 Timothy 4:2-22)

And we desire that every one of you do shew the same diligence to the full assurance of hope unto the end:

That ye be not slothful, but followers of them who through faith and patience inherit the promises.

For when God made promise to Abraham, because he could swear by no greater, he sware by himself,

Saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee.

And so, after he had patiently endured, he obtained the promise. (Hebrews 6:11-15)

I counsel thee to buy of me gold tried in the fire, that thou mayest be rich; and white raiment, that thou mayest be clothed, and that the shame of thy nakedness do not appear; and anoint thine eyes with eyesalve, that thou mayest see. (Revelation 3:18)

Commentary: (for eyesalve)

Salve is an ointment used to promote healing of the skin or as protection. Eyesalve is an ointment used to promote healing of the eyes or as protection.

In this context, “anoint thine eyes with eyesalve” means to cure the spiritual blindness that would help to (see) get spiritual discernment.

And he said, That which cometh out of the man, that defileth the man.

For from within, out of the heart of men, proceed evil thoughts, adulteries, fornications, murders, Thefts, covetousness, wickedness, deceit, lasciviousness, an evil eye, blasphemy, pride, foolishness:

All these evil things come from within, and defile the man. (Mark 7:20-23)

A careful discernment of the word of God will heal the spiritual blindness and enlighten your eyes (spiritual eyes).

Because thou sayest, I am rich, and increased with goods, and have need of nothing; and knowest not that thou art wretched, and miserable, and poor, and blind, and naked:

I counsel thee to buy of me gold tried in the fire, that thou mayest be rich; and white raiment, that thou mayest be clothed, and that the shame of thy nakedness do not appear; and anoint thine eyes with eyesalve, that thou mayest see.

As many as I love, I rebuke and chasten: be zealous therefore, and repent. (Revelation 3:17-19)

The statutes of the LORD are right, rejoicing the heart: the commandment of the LORD is pure, enlightening the eyes. (Psalms 19:8)

In him was life; and the life was the light of men. (John 1:4)

Then spake Jesus again unto them, saying, I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life. (John 8:12)

Commentary:

The verses in Revelation 3:17-19, Psalms 19:8, John 1:4 and John 8:12, tell of a spiritual blindness and that you should be healed. Jesus is the light of the world. Those who follow Jesus shall not walk in darkness, but shall have the light of life. The commandment of the LORD is pure, enlightening the eyes.

Do the work of an evangelist, fulfill your ministry. Always try to get counsel from God for all your doings.

Note: Next Topic is,

4. Spirit of Might

WordPress Lightbox