Home Repentance

Repentance

06 Jun 2020

Repentance Download PDF

மனந்திரும்புதல்

இந்த காலம் தேவனுக்கு இரக்கத்தின் காலமாகவும், மனிதர்களுக்கு மனந்திரும்புதலின் காலமாகவும் இருக்கின்றது.

எவ்வாறு நாம் தேவனிடம் இரக்கத்தை எதிர்பார்க்கின்றோமோ, அதே போல தேவன் நம்மிடையே மனந்திரும்புதலை எதிர்பார்க்கின்றார்.

மத்தேயு 4:17

From that time Jesus began to preach, and to say, Repent: for the kingdom of heaven is at hand.

அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.

மேலே உள்ள வசனம் இவ்வாறாக தொடங்குகின்றது, From that time Jesus began preach,  இயேசு கிறிஸ்து அவருடைய ஊழியத்தை ஆரம்பிக்கும்பொழுது அவர் முதலாவதாக மக்களிடம் சொன்னது, “மனந்திரும்புங்கள்” என்ற வார்த்தையே!

தேவனானவர் உலகத்திற்க்கு வந்ததற்கான நோக்கங்களில், மக்கள் மனம்திரும்புதல் என்பது அவருடைய முக்கிய நோக்கமாக இருக்கின்றது. இதை நாம் லூக்கா 5:32ல் தெரிந்து கொள்ளலாம்.

லூக்கா 5:32

I came not to call the righteous, but sinners to repentance.

நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்க்கு அழைக்கவந்தேன் என்றார்.

அவர் பாவிகள் மனந்திரும்புகிறதற்க்கு அழைக்க பூமிக்கு வந்தேன் என்கிறார். எனவே நாம் பாவியாக இருப்பதினால் நாம் மனம்மாறுவது முக்கிய தேவையாக இருக்கின்றது.

இதோ மனமாற்றத்தின் காலம் இதுவே, வாருங்கள் இப்போதே மனம்மாறிக் கொள்ளுங்கள். இதோ காலம் கனிந்து விட்டது, காலம் நெருங்கி வந்துவிட்டது, அடிமரத்தின் அடியில் கோடாரி வைக்கப்பட்டாயிற்று, தேவனுக்குரிய கனிகள் கொடுக்காத மரங்கள் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும். கோடாரியானது வைக்கப்பட்ட இடத்திலிருந்து மாற்றப்படாதபடிக்கு, ஆதியில் இருந்து இந்நாள் வரை வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே மனமாற்றத்தை இப்பொழுதே நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மனம் மாறிக்கொள்ளுங்கள், வேதத்தை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு தேவனுடைய வார்த்தையை நெற்றியில் எழுதிக்கொண்டு, தேவனுடைய ஒளியில் மறைந்தவர்களாக மாறிக்கொள்ளுங்கள்.

அவர் எக்காள சத்தத்தோடு வரும்போது மனமாற்றத்தை விரும்புகிறார். வெளியரங்கமான உறுப்புகளினால் நீங்கள் செய்த காரியம் எப்பொழுதும் இந்த உலகத்தோடே மறைந்து போகின்றன, உண்மையான மனமாற்றம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, புது மனிதனாக மாறுகின்ற காரியமே.

உண்மையான மனமாற்றம் மனதில் இருந்து புறப்படுகின்றன. ஏனெனில் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சகல பொல்லாத காரியங்களும் புறப்படுகின்றன, அவ்வாறாகவே பொல்லாத  வேசித்தனங்களும், விக்கிரக ஆராதனைகளும், களவுகளும், விபச்சாரங்களும், கோபங்களும் உள்ளத்தில் இருந்தே புறப்படுகின்றன.உள்ளத்திலிருந்து புறப்படுகின்ற காரியங்கள் மனிதனுடைய சொற்களாக மாறுகின்றன, அவ்வாறு மாறும் காரியங்கள் உலகத்தின் மாற்றத்தை மாற்றுகின்றன.

உள்ளார்ந்த மனிதன் புதிதாகும்படியாக, உள்ளார்ந்த மனிதனுக்குள்ளாக இருக்கின்ற காரியங்களுக்குள்ளாக அவன் மனம்திரும்பும்போது, கட்டப்பட்ட கட்டுகள் அவிழ்க்கப்படுகின்றன. உள்ளார்ந்த மனிதன் புதிதாய் சிருஷ்டிக்கும்படி ஒவ்வொரு மனிதனும் உலகத்தை வெறுத்து சிலுவையை சுமந்து கொண்டு என் பின் வாருங்கள்.

ஒருவன் உலகத்தின் மீது அன்பாயிருந்து, மனம்திரும்பிவிட்டேன் என்று உரைப்பானாயின், அவன் பொய்யனாக இருக்கிறான். இதோ நான் கிறிஸ்துவை வணங்குகிறேன் என்று சொல்வதற்க்காக வரவில்லை, கிறிஸ்தவனாக மாற்றப்பட்டேன் என்று சொல்வதற்க்காக நான் பிறந்து வந்தேன்.

ஆகவே உள்ளார்ந்த மாற்றத்தைப் பெற்றுக்கொள்ளும்போது, உங்கள் வாயிலிருந்து புறப்படுகின்றவைகள் என்றென்றும் ஜீவனை கொடுக்கின்றது.

உண்மையான மனமாற்றம் வெளியரங்கமான தோற்றத்திலும் அல்ல, தன்னுடைய வெளியரங்கமான வஸ்திரத்தை கிழித்து கொள்வதிலும் அல்ல, உண்மையான மனம்மாற்றம் என்பது இருதயத்தை கிழித்து கொள்கின்ற காரியம்.

இதோ நீங்கள் உண்மையாகவே மனம்திரும்புகிறீர்கள் என்றால், மாற்கு 7:21-23ல் இருக்கும் காரியங்களை விட்டு விட்டு,

உள்ளான பொல்லாத ஆவியிலிருந்து விடுபட்டு, பரிசுத்த ஆவியில் நிலைத்திருக்கின்ற மக்களாய், புறாவைப் போன்று கபடற்றவர்களாய் மாற்றப்பெற்று மனதில் உருமாற்றம்பெறுங்கள்.

மாற்கு 7:21-23

எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.

பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

பரிசுத்த ஆவியானவர் இதையே விதைக்க விரும்பினார். இப்படிப்பட்ட அக்கினியை உங்களில் வைக்கவே வந்தார்.

அவருடைய கனிகளாகிய ஏழு கனிகளைப் பெற்று, மாற்கு 7:21-23 க்கு மாறாக, கல்வாரி சிலுவையிலிருந்து பொக்கிஷமாக, கொடுக்கப்பட்ட ஆவியின் கனிகளை, நீங்கள் பெற்றுக்கொண்டு தேவனிடத்தில் நிலைத்து இருங்கள். அப்பொழுது தேவன் உங்களிடத்தில் நிலைத்து இருப்பார்.

இதுவே கட்டளையும் நீதியும் சகலமுமாய் இருக்கின்றது. இதற்குள்ளாகவே உன்னை அன்பு செய்வது போல பிறரை அன்பு செய் என்ற கட்டளை அடங்கி இருக்கின்றது. இதோ முதலாம் கட்டளை தேவனுக்குரியதாய் தேவனை குறிக்கிறது. இரண்டாம் கட்டளை மாற்கு 7:21-23லில் எழுதப்பட்ட காரியங்களுக்குள்ளாக மறைக்கப்பட்டு இருக்கின்றது.

உலகத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லி உலகத்தை வெறுக்கின்ற மகனாய் நீ இருக்கும்போது மாற்கு 7:21-23லில் உள்ள காரியங்களை உன்னால் விட முடியும். உலகத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையும் தேவனிடத்திலிருந்து வருவதில்லை. மாமிசத்தின்  இச்சைக்குரிய காரியங்களில் இருந்து விடுபட்டு, உன்னை நேசிப்பது போல பிறரை நேசி, இதுவே புதிய கட்டளை என்று கொடுத்து விட்டு சென்றேனே, நீங்கள் அன்பை மறந்து போனீர்கள். தேவனுக்குரிய அன்பு இதுவாய் இருக்கின்றது. இதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களைக்கொண்டு இது என்ன அது என்ன என்று தேடி தேடி அழையவேண்டாம், உன்னதரான கர்த்தர் மறைபொருளின் ரகசியத்தை வெளிப்படுத்தினார். நான் சொல்ல வந்த காரியம் இதுவே, இதையே விதைக்க வந்தேன், விதைக்க வந்த ஆண்டவர் ஆசீர்வதிக்கப்படுவாராக.

உண்மையை தேடுகிறவன் என்னை கண்டு பிடிப்பான் என்று எழுதப்பட்ட பிரகாரமே, முழு உள்ளத்தோடும், முழு ஆத்துமத்தோடும், முழு எண்ணத்தோடும் தேவன் ஒருவரே போதும், மாற்கு 7:21-23லில் உள்ள காரியங்களை விட்டு விடுவதே, எங்கள் முழு நோக்கமாய் இருக்கின்றது என்று உங்கள் சிந்தனையில் ஏற்றுக்கொள்ளும் பொழுது, ஜீவத்தண்ணீருக்குள்ளாக உருப்பெற்ற மகனாக, நீங்கள் பிறக்க வேண்டியதாய் இருக்கின்றது, இதுவே மறுபடியும் பிறத்தலாக (மறுபிறவியாய்) இருக்கின்றது. இதோ ஏழு ஆவிகளையும் நீங்கள் பெற்றுக்கொண்டு, தகப்பனே நாங்கள் உலகத்தார் அல்ல என்று அறிக்கையிட்டு மனம் மாறுபவன், நான் எழுதி வைத்தது போல மரித்தாலும் வாழ்வான். தேவன் என்றென்றும் ஆசீர்வதிக்கப் படுவாராக.

தேவனுடைய ஆவியானவர் தாமே உங்கள் கண்களை திறப்பாராக, ஆமென்!

ஜெபம்:

விண்ணையும் மண்ணையும் படைத்த தேவனுக்கே மகிமை செலுத்துகின்றேன். உன்னத பரிசுத்தரே, எப்பொழுதும் எங்களின் காவலாளியாகவும் எஜமானனாகவும் இருப்பவரே, ஆடுகளுக்கு மேய்ப்பனாய் இருப்பவரே, பிரதான ஆச்சாரியாரே உம்மை எப்பொழுதும் போற்றுகின்றோம். சர்வேசுரனுடைய இரக்கத்திற்குள்ளும், கிருபைக்குள்ளும் எங்களை மறைத்து கொள்வீராக. உன்னதரே உயர்ந்தவரே, இந்த ஏழையின் குரலை கேட்டருளும்,

உம்முடைய ஒளியிலே மறைக்கப்பட்டவர்களாய், உமது ஆடைக்குள்ளே மறைந்தவர்களாய், அன்று நோவாவை பேழைக்குள்ளே மறைத்தது போல எங்களையும் மறைத்துக் கொள்ளும்,  மினோராவில் இருந்து புறப்படுகின்ற வெண்புகையினால் தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. அவருடைய மகா பரிசுத்த நாமத்திற்கு மகிமையும் மாட்சிமையும் உண்டாக்கட்டும்.

காட்டு அத்தி மரங்களின் இலைகளாய் இருக்கும் எங்களை உமது வாழ்வின் மரத்தில் இணைக்கும்படியாக மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் ஈவுகளில் ஒன்றான மனமாற்றத்தை தந்தருளும், தாழ்ச்சியில் நொறுங்குண்ட இருதயத்தை தந்தருளும்,

ஆண்டவரே ஆண்டவரே, என்னை உருமாற்றும், உம்முடைய இரத்தத்தினால் உருமாற்றும். என்னுடைய இருதயத்தை, உம்முடைய இரத்தத்தினால் பரிசுத்தப்படுத்தும். நான் உமக்கு அடிமையாகவே இருக்கின்றேன், உலகத்தின் இச்சையையும், மாமிசத்தின் இச்சையையும், ஜீவனத்தின் பெருமையையும் விட்டுவிடுகின்றேன். நான் என்னை நேசிப்பது போல, பிறரை நேசிப்பேன். தாழ்ச்சியின் ஆவிக்காக மன்றாடுகிறேன்.

ஆண்டவரே, முழு உள்ளத்தோடும், முழு ஆத்துமத்தோடும், முழு எண்ணத்தோடும் உம்மை தேடுகின்றேன். நீர் ஒருவரே எனக்கு போதும், மாற்கு 7:21-23 உள்ள காரியங்களை விட்டு விடுவதே, நான் நோக்கமாய் கொண்டுள்ளேன்.

தகப்பனே, நாங்கள் உலகத்துக்கு விலகியவனாக, இதோ உமக்காகவே காத்து இருக்கின்றேன். உம்முடைய காரியத்திற்காக காத்து இருக்கின்றேன். உலகத்துக்காக அல்ல, பரலோகத்திற்காக ஜெபிக்கின்றேன். உம்மிடம் இருந்து வரும் ஆவியானவருக்காக காத்திருக்கிறேன், இன்று எங்கள் மேலே அக்கினியாக இறங்கும் ஆண்டவரே.

திராட்சை செடியின் கொடியாக, உம்மில் எப்போதும் நிலைத்திருப்பேன், என்னை நெறுக்கினாலும், தூற்றினாலும், துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் உம்மையே முன்னிறுத்துவேன், உலகை பின்னிறுத்துவேன்.

எல்லாம் வல்ல இறைவன் என்னிடத்தில் இருக்கின்றார். இந்த உலகத்தில் எனக்கென்று  ஒன்றுமில்லை. என்னுள் வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே வாழ்கிறார், ஆமென்!

 

Meaning of Repentance = Changing your heart from sins of MARK 7:21-23 and asking forgiveness for the same sins.

சங்கீதம் 32

  1. எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.
  2. எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
  3. நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
  4. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)
  5. நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)
  6. இதற்காகச் சகாயங்கிடைக்குங்காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.
  7. நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)
  8. நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
  9. வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.
  10. துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.
  11. நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.

சங்கீதம் 38

  1. கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
  2. உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.
  3. உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
  4. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.
  5. என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
  6. நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
  7. என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.
  8. நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
  9. ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
  10. என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.
  11. என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
  12. என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
  13. நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறவாதவனாகவும் இருக்கிறேன்.
  14. காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப் போலானேன்.
  15. கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.
  16. அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.
  17. நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.
  18. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.
  19. என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
  20. நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
  21. கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.
  22. என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

சங்கீதம் 51

  1. தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
  2. என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
  3. என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
  4. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
  5. இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
  6. இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
  7. நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
  8. நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
  9. என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
  10. தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
  11. உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
  12. உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
  13. அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
  14. தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
  15. ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
  16. பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
  17. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
  18. சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
  19. அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள், ஆமென்.

 

WordPress Lightbox